தீபாவளித் தினமான 10.11.2015 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை வழிகாட்டல்-ஆலோசனைப் பிரிவினரும் பாடசாலை மாணவர்களும், ”நமக்காக நாம்” அமைப்பும் இணைந்து கொழும்புத்துறை சென் ஜோசப் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களைச் சந்தித்து அவர்களிடம் தனித்தனியாகவும், குழுவாகவும் சந்திப்புக்களை நடத்தி அர்த்தமுள்ள பகிர்வை, உறவை ஏற்படுத்தியதுடன், முதுமையின் அனுபவத்தை உணர்வுடன் போற்றுவோம், தவிப்பு ஆகிய குறும்படங்களும் காண்பிக்கப்பட்டது.
அத்துடன் ”நமக்காக நாம்” அமைப்பினரின் ஏற்பாட்டில் இல்லத்திலுள்ள அனைத்து முதியவர்களுக்கும் பழங்கள் வழங்கப்பட்ட்து.
தொடர்ந்தும் இவ்வாறான இளையவர்கள் தம்மோடு கலந்து மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென கொழும்புத்துறை சென் ஜோசப் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் தெரிவித்தனர்.