பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை!

0
310

பிரான்சில் மிகப்பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை வைக்கும் இந்தியப் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் அனுமதியளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி ” பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மோடி, அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற நிலையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of Legion of Honor என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரான்க்ற்றி, இந்த விருதை மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய இருவரும் இருநாட்டு நல்லுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மேலும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,’’ 21 ஆம் ஆண்டு நூற்றாண்டில் இந்தியாவும், பிரான்சும் பல சவால்களை சந்தித்து வருகின்றன’ என்று கூறினார்.

மேலும்,’’ உலகின் தொன்மையான மொழி தமிழ். அத்தகைய சிறப்புடைய தமிழ் மொழி, இந்தியாவின் மொழிகளில் ஒன்று ‘’என்று புகழ்ந்துள்ளார்.

மேலும், பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும் என்றார்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள பிரான்ஸிக்கு வழங்கப்படவுள்ள சிலையை இன்ஹியாவின் புதுச்சேரியைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார். இந்த சிலை 7 அடி உயரத்தில், 600 கிலோ எடையில் உருவாகியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த சிலை பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், இந்தச் சிலை பிரான்ஸ் நாட்டிலுள்ள தமிழ்க் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் சேர்ஜி – மைய பூங்காவில் இந்த நிறுவ உள்ளாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here