தமிழகத்தில் சமூக இணைய மோகம்; மூன்று ஈழத் தமிழ் இளைஞர்கள் பலி!

0
154

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த மூன்று இளைஞர்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உந்துருளியில் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் “ரிக்ரொக்” இணையத்தில் பதிவிட தாங்கள் உந்துருளியில் செல்வதை கைபேசியில் காணொளி எடுத்தபடி செல்லவே ஒருகட்டத்தில் முன் சென்ற பார ஊர்தியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

பாரவூர்தியை ஒரு வளைவில் அவர்கள் முந்திய போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் உந்துருளியில் வந்த 3 பேரும் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் இளைஞர்களின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் விபத்து குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தயாளன் (வயது19), சார்லஸ் (வயது21), ஜான் (வயது20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தியதாக பாரவூர்தி சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here