“மனநிறைவைத் தந்த சிறந்த வில்லிசை (கண்ணகியின் கதை) அரங்கேற்றம்”

0
92

நேற்று (21/05/2023) யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற செல்வன் நி. மோகனதர்சன் அவர்களின் வில்லிசை அரங்கேற்ற நிகழ்வைப் பார்த்துக் கேட்டு இரசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மோகனதர்சனுடைய குரு திரு.சி.செந்தூரன் அவர்கள் நாடறிந்த சிறந்த பல்துறைக் கலைஞர். பல துறைகளில் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர்.

மாணவனுடைய வழிகாட்டி திரு. த. றொபேர்ட் அவர்களும் நாடறிந்த பல்துறைக கலைஞர். வில்லிசை ஆற்றுகையில் இருபது வருடங்களின்மேல் அனுபவம் கொண்டவர். தமிழிசை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிக் கொண்டிருப்பவர். இருவரும் இணைந்து மூன்று சிறந்த வில்லிசைக் கலைஞர்களை உருவாக்கியுள்ளன்னர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

அரங்க நிகழ்வில் அனுபவக் கலைஞர்களான றொபேர்ட் அவர்கள் ஆர்மோணியம் வாசித்தமையும், செந்தூரன் அவர்கள் மிருதங்கம் வாசித்தமையும் நிகழ்ச்சியை மெருகூட்டியிருந்தன.

அரங்கநிகழ்வின்,
விற்குரு நி.மோகனதர்சன் அவர்களின் ஆற்றுகையில் சுருதி, லயத்துடன் கூடிய பாட்டு, தெளிவான மொழி உச்சரிப்பு, பொருத்தமான அங்க அசைவுகள். நகைச்சுவைகள், பொருத்தமான முறையில் கதையை நகர்த்தும் ஆற்றல் என்ற அனைத்தும் ஒருங்கமையப் பெற்றிருந்தன.

பக்கப்பாட்டுப் பாடிய பே.பிரசன்னா அவர்களும், விற்கடம் வாசித்த மு.சுலக்சன் அவர்களும் சிறப்பாக ஆற்றுகை செய்தனர், இவர்களுடைய தெளிவான மொழி உச்சரிப்பு, சுருதி லயத்துடன் கூடிய பாடல்கள், சிந்திக்கவைக்கக் கூடிய நகைச்சுவைகள் என அனைத்திலும் அசத்தினார்கள்.

மண்டபம் நிறைந்த இரசிகர்களின் கைதட்டல்களும்,சிரிப்பொலிகளும் நிகழ்விற்கு மகுடம் சூட்டின.

சிறப்பான வில்லிசை நிகழ்வைப் பரத்துக் கேட்டு இரசித்த ஆத்ம திருப்தி ஏற்பட்டது.

மொத்தத்தில் மோகனதர்சன், பிரசன்ன, சுலக்சன் ஆகிய மூன்று சிறந்த வில்லிசைக் கலைஞரகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இந்த வில்லிசைக் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கி வில்லிசையைப் பேணிப் பாதுகாக்க ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

-நன்றி: சிவசிவா சிவபாதரட்ணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here