வடக்கு கிழக்கு எங்கும் பயணித்து மட்டக்களப்பு அன்னை பூபதியின் நினைவிடத்தை அடைந்த ஊர்திப் பவனி!

0
101

அன்னை பூபதியின் 35வது நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த ஊர்திப் பவனி, வடக்கு கிழக்கு எங்கும் பயணித்து, மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தை இன்று வந்தடைந்தது.



நினைவிடத்திற்கு அருகே, அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியை தரித்து, அங்கே தமது அஞ்சலி நிகழ்வுகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மேற்கொண்டது.
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், சட்ட ஆலோசகர் ந.காண்டீபன் உட்பட கட்சி ஆதாரவாளர்கள் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here