யாழில் மீனவர்கள் தொடர் போராட்டம்!

0
91

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் பருத்தித்துறை வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்ல முடியாதவாறு பருத்தித்துறை பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்த நிலையில் திடீரென வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவ்வழியே வருகை தந்த நீதிவானும் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

தமக்குரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் இணைந்து மீனவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் மீனவர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஈழக்கடல் மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு, கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்கள், மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து போன்ற கோசங்கள் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here