இந்தியாவைத் தாக்கும் H3 N2 வைரஸ் காய்ச்சல்: 2 பேர் உயிரிழப்பு; இதுவரை 90 பேர் பாதிப்பு!

0
112

இந்தியாவில் H3 N2 வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் காய்ச்சலின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில், 90 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைப்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் 200 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1,300 இடங்களில் நேற்று காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் பெருமளவில் பதிவாகவில்லை என்பதால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here