கிரேக்கத்தின் கடைசி மன்னர் சாவடைந்தார்!

0
88

கிரேக்கத்தின் கடைசி மன்னரான இரண்டாவது கொன்ஸ்டன்டைன் தனது 82ஆவது வயதில் காலமானார்.

ஏதன்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் மரணித்ததாக மருத்துவ ஊழியர்களை மேற்கோள் காட்டி ஏ.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கிரேக்கத்தில் இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்று பதற்றமான காலப்பகுதியில் 1964 ஆம் ஆண்டில் இரண்டாவது கொன்ஸ்டன்டைன் முடிசூடினார். எனினும் தோல்வியுற்ற எதிர் சதிப்புரட்சி ஒன்றை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.

தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் முடியாட்சி கலைக்கப்பட்டது. அதனை அடுத்து இரண்டாவது கொன்ஸ்டன்டைனின் கிரேக்க பிரஜா உரிமையும் அகற்றப்பட்டது. டென்மார்க் இளவரசி அன்னே மரீயை மணந்த அவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். 2002இல் அவருக்கும் அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் நாட்டில் உள்ள அவரது சொத்துகளுக்காக இழப்பீடு வழங்கப்பட்டது.

1960 ஒலிப்பிக் போட்டியின் படகோட்டப் போட்டியில் அவர் தங்கப்பதக்கமும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here