
மாவீரர் மாதம் தொடக்க நாளில் இன்று யாழ் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல அருகில் சிரமதான பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த ஏற்பாட்டு குழுவுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து எமது புனிதமான நினைவேந்தல் ஏற்பாடுகளை தடுக்க முயற்ச்சித்தனர்
பௌத்த கொடிகளைகளை தாங்கிய கம்பிகளை துயிலுமில்லங்களை சுற்றி ராணுவத்தினர் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்த வேளை அங்கு பிரசன்னமாயிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமாரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.
மேலும் கருத்து தெரிவித்த கஜேந்திர குமார்.
மாவீரர் நாள் நினைவேந்தலை குழப்புவதற்காக பௌத்த நிகழ்வுகள் இல்லாத நாளில் இவ்வாறு பௌத்த கொடிகளை நாட்டி எமது நினைவேந்தலை கூட செய்வதற்கு இடையூறு விளைவிக்கிறது இந்த அரசு.
நினைவேந்தலை அமைதியான முறையில் செய்வதற்கு அரசு அனுமதித்த போதிலும் ராணுவத்தினரின் இவ்வாறான செயல் வருந்ததக்கது என்று குறிப்பிட்டார்.
நீங்கள் இறந்த ஆன்மாக்களின் நினைவேந்தலை தடைசெய்ய முற்பட்டு மீண்டும் பாவமூட்டைகளை சுமக்காதீர்கள், இன்று நாட்டின் நிலைமைக்கு இதுவும் ஒரு காரணம்,என்று குறிப்பிட்ட அவர் எம்மை சுடுவதென்றால் சுடுங்கள் நாம் எமக்காக மரணித்த வீர மறவர்களின் நினைவேந்தலை முன்னெடுப்போம் என்று கஜேந்திர குமார் உறுதியாக தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,ஊடக பேச்சாளர் சுகாஷ்,மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர்,செயலாளர் கிருபா கிரிதரன்,முன்னணி உறுப்பினர்கள் ஆர்வலர்கள் என பலரும் ஏற்பாட்டு குழுவுடன் இணைந்து கொட்டும் மழையிலும் சிரமாதன பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.








