
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்ச்சோலை மாணவர்களுக்கு இடையிலான திருக்குறள் திறன் திணைக்கள மட்டப் போட்டிகள் 16/10/22 அன்று பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

தமிழ்ச்சோலைப் பள்ளிகள் மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் முதல் இடம் பிடித்த 300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டனர். காலை 9.30 இற்கு அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வு மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. நடுவர்களாக தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் பணியாற்றியிருந்தனர்.

இப்போட்டிகளில் முதலாம் இடத்தைப் பிடித்த மாணவர்களுடன் வெளிமாகாண தமிழ்ச்சோலைகள் இணைந்த தேசிய மட்டத்திலான போட்டிகள் எதிர்வரும் 06 /11/2022 அன்று இதே மண்டபத்தில் நடைபெறும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
