வவுனியா, நெடுங்கேணியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நெடுங்கேணி – சிவா நகர் பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டுக்கு வெளியில் வரும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.