
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரத மேடையில் அமர்ந்த நேரமாகிய காலை 9.45 இற்கு திலீபனின் திருவுருவப்படம் 09.01.1985 அன்று யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவடைந்த கப்டன் பண்டிதர் அவர்களின் தாயாரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.
நினைவேந்தல் நிகழ்வுகளின் போது ஒவ்வொரு நாளும் முதன்மைச் சுடரினை மாவீரச் செல்வங்களின் பெற்றோர்கள் ஏற்றிவைப்பதற்கு ஏற்றவகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





