தீயாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி ஆரம்பமாகியுள்ளது.இந்த வாகன ஊர்த்தி இன்று பொத்துவில் நகரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இந்நினைவு தின வாகன ஊர்த்தியின் ஆரம்ப நிகழ்வை பொத்துவில் நகரில் இன்று காலை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு பொது மக்கள் மலர் தூவி திலீபனின் உருவப்படத்திற்கு தமது மலர்வணக்கத்தை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பிரதான வீதி வழியாக திருக்கோவில் நகரை சென்றடைந்தது.இதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தியாக தீபம் திலீபன் தொடர்பான நினைவுப் பேரூரை ஒன்றினை நிகழ்த்தி இருந்தார்.இந்நிகழ்வு திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன பேரணி பொத்துவில் நகரில் ஆரம்பமாகி, அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது.