
எடின்பர்க் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனை வாசலில் அவரது பிள்ளைகள் கண்ணீருடன் காத்திருந்தனர்.ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் இருந்து செயின்ட் கில்ஸ் பேராலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பால்மோரல் மாளிகையில் இருந்து ஊர்வலமாக எடின்பர்க் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது ராணியாரின் உடல்.எடின்பர்க் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனை வாசலில் அவரது பிள்ளைகள் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வார்ட் மற்றும் இளவரசி ஆன் ஆகியோர் கண்ணீருடன் காத்திருந்தனர்.
ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் இரவு முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் இரவு முழுவதும் ராணியாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும்.
இதனால் ஆயிரக்கணக்கன மக்கள் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனை சுற்றுவட்டாரத்தில் திரண்டுள்ளனர். ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் இருந்து பின்னர் எடின்பர்க் செயின்ட் கில்ஸ் பேராலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.இந்த ஊர்வலத்தில் அவரது பிள்ளைகள் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வார்ட் மற்றும் இளவரசி ஆன் ஆகியோர் நடந்தே செல்ல உள்ளனர். ஆனால் மூன்றாம் சார்லஸ் மன்னரும் அவரது மனைவியும் இந்த ஊர்வலத்தில் காரில் செல்ல உள்ளனர்.
இதனிடையே, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் ராணியாரின் உடலை துக்கம் அனுசரிக்கும் பொதுமக்கள் பார்க்க முடியும் என எடின்பர்க் கவுன்சில் உறுதி செய்துள்ளது.பாதுகாப்பு சோதனைகள் மற்றும் மொபைல் போன்களில் கட்டுப்பாடுகளுடன் வரிசை அமைப்பும்m நடைமுறையில் இருக்கும். புகைப்படம் எடுப்பது மற்றும் பதிவு செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.ஸ்காட்லாந்தின் தலைநகரின் தெருக்களில் மக்கள் பல மணிநேரங்களில் ராணியின் இறுதி ஊர்வலத்தின் வருகைக்காக
கார்த்து இருந்தார்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த வருகை தர உள்ளனர். தற்போதைய வேல்ஸ் இளவரசரும், இளவரசியுமான வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதி, இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோரும் விண்ட்சர் அரண்மனைக்கு வருகை தந்துள்ளனர்.அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பிறகு, இங்கிலாந்து மக்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் 4 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்தின் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.