
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 16 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் இன்று (14.08.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி புஸ்பா அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக அபிராமி நாட்டியப்பள்ளி மாணவிகளின் எழுச்சி நடனம் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலான நினைவுரைகள் இடம்பெற்றன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் செல்வன் திவாகர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
வழமை போன்று
வெளிநாட்டவர்கள் பலரும் எமது நினைவேந்தலுக்கான காரணத்தைக் கேட்டு அறிந்துகொண்டனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(படங்கள்:ராஜ்)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)












