
உரிய சட்ட ஏற்பாடுகள் இல்லாததால் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை அந்த பகுதியிலிருந்து அகற்றப்போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபருக்காக முன்னிலையான மேலதிக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு உடனடி உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்
எனினும், இடைக்கால பகுதியில் அந்தப் பகுதியில் காணப்படும் தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாங்களாக முன்வந்து அந்த பகுதியிலிருந்து வெளியேற முயல்பவர்களை தடுக்கும் விதத்தில் சட்டமா அதிபரின் வாக்குறுதிகள் அமையாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது