சுவிஸ் நாட்டுத் தடுப்பில் உயிரிழந்த 3 புலம்பெயர் தமிழர்கள்; நீதிகோரி மக்கள் போராட்டம்!

0
204

சுவிட்சர்லாந்து நாட்டு தடுப்புக்காவலில் மூன்று இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் கொள்கைக்கு முடிவு கட்டவேண்டும் என்றும், நீதி வழங்கவேண்டும் என்றும் கூறி சுவிட்சர்லாந்தில் பேரணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பேசலில் அமைந்திருக்கும் Bässlergut நாடுகடத்தல் சிறை ஒன்றின் முன் பதாகைகளுடன் கூடிய போராட்டக்காரர்கள் பலர், சுவிட்சர்லாந்து தமிழர்களை நாடுகடத்துதற்கெதிராக கோஷம் எழுப்பினார்கள்.

சுவிஸ் அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்து இந்த அநியாய செயலில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

சுவிஸ் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் துவங்கியுள்ளன.

2018 ஆம் ஆண்டு 28 வயது தமிழ்ப் பெண் ஒருவர் சிறையில் உயிர்ழந்தது தொடர்பான வழக்கில், தொடர்புடைய சுவிஸ் பாதுகாவலர்கள் சிலர், சென்ற ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, Nesurasa Rasanayagam என்பவர் சுவிட்சர்லாந்திலுள்ள Gampelen என்ர இடத்தில் அமைந்திருந்த முகாமில் உயிரிழந்தார். இரண்டு வாரங்களுக்குப் பின் அவர் உயிரிழந்ததாக மட்டும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சென்ற மாதம், மற்றொரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான Naguleswaran Vijayan தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மரணங்கள், சுவிட்சர்லாந்தின் புகலிட மற்றும் புலம்பெயர்தல் கொள்கையின் குரூரத்தை வெளிப்படுத்துவதாக பேரணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சுவிஸ் நாட்டில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட பலர் தமது நாட்டிற்கு திரப்பி அனுப்பப்படும் அச்சத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று தமது புகலிடகத் தஞ்சக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றமையும் .

இவ்வாறான பலரின் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் சுவிஸ் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here