தமிழீழத்தில் இருந்து ஏதிலியாகச் சென்ற மூதாட்டி தமிழகத்தில் உயிரிழப்பு!

0
227

தமிழீழத்தில் இருந்து தமிழகத்திற்கு பிள்ளைகளைத் தேடி ஏதிலியாகச் சென்ற மன்னாரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பிள்ளைகளைக் காணாமலே உயிரிழந்துள்ளார்.

இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி கடந்த (02.07.2022) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய வயோதிப தம்பதிகள் இருவரும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர்.

இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு : அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி கடந்த (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவருடைய சடலம் பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்து ஏதிலிகள் தமிழகம் நோக்கிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here