ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி நெருக்கடியில் உதவும் இந்தியா!

0
83

மேற்கின் தடைகளில் இருந்து மீள
புடினுக்குக் கைகொடுப்பார் மோடி

மேற்குலகின் நிதி, பொருளாதாரத் தடை
களால் மிகவும் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்
படுத்தப்பட்டுள்ள மொஸ்கோவுக்கு அந்த
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்
தியா கைகொடுக்கும் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.தற்போதைய உலக நெருக்கடி ரஷ்யாவின் மசகு எண்ணெய்
யை மலிவான விலைக்கு வாங்கக் கூடிய வாய்ப்பை இந்தியாவுக்குத் திறந்துவிட்
டுள்ளது.எண்ணெய்யையும் ஏனைய ரஷ்ய ஏற்றுமதிகளையும் இந்தியா வாங்
கவுள்ளது என்பதை டில்லி அதிகாரிகள்
உறுதிப்படுத்தி உள்ளனர்.

ரஷ்யாவுடன் ரூபிள் – இந்திய ரூபாய்
(rupee-rouble) பணப் பரிமாற்றத்தின்
அடிப்படையில் பொருள்களை வாங்கு
வது தொடர்பில் மோடி அரசாங்கம் கவ
னம் செலுத்தி வருகிறது.

உக்ரைன் போரில் இந்தியாவை ரஷ்யா
வுக்கு எதிர்ப்பக்கமாகத் தள்ளி வைத்தி
ருப்பதற்கே அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால் இந்தியா அதன் ஆயுதங்கள் வெடிமருந்து முதல் ஏவுகணைகள், போர்
விமானங்கள் வரையான அனைத்துக்
கும் ரஷ்யாவோடு நெருங்கிய வர்த்தகப்
பங்காளியாக இருந்துவருவதை மேற்கு
லகம் ஏற்றுக்கொள்கிறது.ஆயினும் சமீப
காலங்களில் இந்தியா அதன் இராணு
வத் தேவைகளுக்கு மொஸ்கோவில் தங்
கியிருப்பதைக் குறைப்பதற்காக மேற்கு
நாடுகள் சில உதவிகளை அதிகரித்திருக்
கின்றன.

உக்ரைன் மீதான போர் ஆரம்பித்தது
முதல் இந்தியா ரஷ்யாவின் பக்கம் நிற்
கிறது. சோசல் மீடியாக்களில் இந்திய
மக்களது ஆதரவும் புடினுக்கே அதிக
மாகத் தெரிகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா
கண்டிக்கவில்லை. போரைக் கண்டித்து ஐ. நா. பாதுகாப்புச் சபையும் பொதுச் சபையும் தீர்மானங்களை நிறைவேற்றிய
போது இந்தியா நைசாக விலகியே இருந்
தது.தனது பாதுகாப்புப் படைகளுக்கான 80 வீதமான ஆயுததளபாட உதவிகளுக்
காக ரஷ்யாவிடம் தங்கியிருக்கின்ற புது
டில்லி, மொஸ்கோவின் நீண்ட காலக்
கூட்டாளி. இந்தியப் படைகள் பயன்படுத்
தும் போராயுதங்களில் 60 முதல் 85 வீத
மானவை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்
டவை.காஷ்மீர் தொடர்பான சிறு முரண் பாடுகளைத் தவிர சோவியத் காலம் முதல் நீடித்து வருகின்ற இருதரப்பு அரசியல், பொருளாதார, மூலோபாய நெருக்கத்தை அவதானிப்பவர்களுக்கு இப்போது உக்ரைன் போர்க் காலத்தில் டில்லி எடுத்துள்ள நிலைப்பாடுகள் ஆச்சரியமளிக்கப் போவதில்லை.

        -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                 15-03-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here