பிரான்ஸ்: உலகப் போர் நினைவேந்தல் நாளில் எதிர்ப்புப்படை வீரரின் உடல் அடக்கம்!

0
501

அஞ்சலி நிகழ்வில் கமலா ஹரிஸ்

முதலாம் உலகப் போரின் நிறைவைக் குறிக்கின்ற நினைவு நாள்(Armistice Day) நிகழ்வுகள் இன்று பாரிஸில் நடைபெற்
றன.

பாரிஸ் நகரில் உள்ள வெற்றி வளைவில்
(Arc de Triomphe) அடையாளம் தெரியாத
படை வீரர் ஒருவரது உடல் புதைக்கப்
பட்டிருக்கின்ற இடத்தில் வழமையான
அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.அதே
வேளை கடந்த மாதம் தனது 101 ஆவது வயதில் காலமாகிய முன்னாள் எதிர்ப்புப்
படை வீரர் ஹூபர்ட் ஜெர்மென்(Hubert German) அவர்களது உடல் அங்கு எடுத்து
வரப்பட்டு அவருக்கு அங்குவைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.அந்த அஞ்சலி நிகழ்வுகளில் அரசுத் தலைவர்
மக்ரோனுடன் அமெரிக்காவின் துணை
அதிபர் கமலா ஹரிஸ் அம்மையாரும்
கலந்துகொண்டு ஹூபர்ட் ஜெர்மெனின்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாரிஸ் நகர முதல்வர் ஆன் கிடல்கோ,
பிரதமர் ஜீன் காஸ்ரோ மற்றும் செனட்
சபை உறுப்பினர்கள் உட்பட வேறு பல
ரும் அஞ்சலியில் பங்குபற்றினர்.

பாரிஸ் நகரில் நடந்த அஞ்சலி நிகழ்வை
தொடர்ந்து ஹூபர்ட் ஜெர்மெனின் உடல்
புறநகரான Mont-Valérien மலைப்பகுதிக்கு
எடுத்துச் செல்லப்பட்டது. நாஸிப் படை
களால் பிரெஞ்சு விடுதலை வீரர்கள் படு
கொலை செய்யப்பட்ட நினைவு மையம்
Mont-Valérien நகரில் அமைந்துள்ளது.
அங்கு வீரர்களின் உடல்கள் புதைக்கப்
பட்ட இடத்தில் கடைசி வீரரான ஹூபர்ட் ஜெர்மெனின் உடலும் விதைக்கப்பட்டது.

அங்கு அஞ்சலி உரையாற்றிய அதிபர்
மக்ரோன் இடையில் உணர்ச்சிவசப்பட்டு
கண் கலங்கியதை செய்தி நேரலைகள்
முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின.

இரண்டாம் உலகப் போரின் போது நாஸி
களிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்
காக ஜெனரல் து கோல்(General de Gaulle)
அவர்களது விடுதலைக்கான கட்டளை
யை ஏற்று அவரோடு இணைந்து போரி
ட்ட1038 எதிர்ப்புப்படை வீரர்களில்(French Resistance fighter)உயிருடன் எஞ்சியிருந்த

ஒரேயொரு கடைசி வீரரே ஹூபர்ட் ஜெர்மென் ஆவார்.

குமாரதாஸன். பாரிஸ்.
11-11-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here