காபூலில் ஐ.நா.பாதுகாப்பு வலயம் கோரும் மக்ரோன்; தலிபான் மறுப்பு!

0
152

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வலயம் ஒன்றை நிறுவேண்டும் என்று
அதிபர் எமானுவல் மக்ரோன் யோசனை
வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளால்
அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
மனிதாபிமானப் பணிகளைப் பாதுகாப்
பதற்கு அங்கு ஒரு வலயம் (‘safe zone’) அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டி
யிருக்கிறார்.

மக்ரோன் வார இறுதியில் ஈராக்கிற்கு
விஜயம் செய்த சமயம் அங்கு வைத்து இந்த யோசனையை வெளியிட்டிருந்
தார். இது தொடர்பாகக் கருத்து வெளி
யிட்டிருக்கும் தலிபானின் அரசியல்
பிரிவின் பேச்சாளர், அதனை வெளிநாட்
டுத் தலையீடு என்று கூறி நிராகரித்துள்
ளார்.”ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திர
நாடு. பிரான்ஸிலோ ஜேர்மனியிலோ
இவ்வாறு ஒரு பாதுகாப்பு வலயத்தை
நிறுவ முடியுமா?”-என்று அவர் திருப்பிக்
கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா
சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய
ஐ. நா. பாதுகாப்புச் சபை ஆப்கானிஸ்
தான் நிலைவரம் தொடர்பாக விவாதிப்
பதற்கு இன்று திங்கட்கிழமை கூடுகின்
றது. அச் சந்தர்ப்பத்திலேயே மக்ரோனின்
யோசனை வெளியாகி உள்ளது.

காபூலில் பாதுகாப்பு வலயம் நிறுவுகின்ற
யோசனை அடங்கிய பிரேரணையை
பிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து கூட்
டாக முன்வைக்கவுள்ளன என்ற தகவல்
வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் காபூலில் இருந்து இதுவரை
2ஆயிரத்து 834 பேரை வெளியேற்றி
உள்ளது என்ற தகவலை வெளியிட்டிருக்
கின்ற மக்ரோன், எதிர்காலத்தில் மேற்
கொள்ளவேண்டிய மீட்புப் பணிகள் தொடர்பாகத் தலிபான்களுடன் பேச்சு
முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் வெளி
நாடுகளின் மீட்புப் பணிகள் முடிவடைந்து
விட்டன. தற்சமயம் அது தலிபான்களின்
கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ. எஸ். தீவிரவா
திகள் விமான நிலையம் மீது ரொக்கற்
குண்டுகளை வீசித் தாக்க முயற்சித்து
வருகின்றனர். பதிலுக்கு அமெரிக்கா
ட்ரோன் விமானங்களைப் பாவித்து
தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடை
சியாக அமெரிக்காவின் ட்ரோன் தாக்கு
தலில் சிக்கி சிவிலியன்கள் பத்துப்பேர்
உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளி
யாகியுள்ளன.


குமாரதாஸன். பாரிஸ்.
30-08-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here