
பாலர் மற்றும் ஆரம்ப (maternelles et élémentaires) பாடசாலைகள் ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. இடைநிலை, உயர் நிலைப் பள்ளிகள்(Les collèges et les lycées) மே மூன்றாம் திகதி தொடங்கும்.
பிரான்ஸின் பிரதமர் Jean Castex செய்தி
யாளர் மாநாட்டில் இதனை அறிவித்தார்.
நாட்டின் சுகாதார நிலைமைகள் முன்னே ற்றம் கண்டு வருகின்றன. ஆனாலும் பாடசாலைகளைத் திறக்கக் கூடிய அளவு
க்குத் தொற்று நிலைமை சீராகவில்லை
என்றாலும் பள்ளிகளை தொடர்ந்து மூடி
வைப்பதால் நீண்டகால நோக்கில் ஏற்படுகின்ற கல்வி மற்றும் உளவியல் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ள
வேண்டி உள்ளது-என்று பிரதமர் தெரிவி
த்தார்.
உமிழ் நீர் (saliva), சுயகருவி (self-tests) மூலமான வைரஸ் பரிசோதனைகள் வகுப்பறைகளில் தொடர்ந்து மேற்கொ ள்ளப்படும்.ஒருவர் தொற்றுக்கு உள்ளா னால் வகுப்பறையை மூடும் விதிகள் தொடர்ந்து இருக்கும்.
உள்நாட்டில் அமுலில் உள்ள பத்து கிலோ மீற்றர்கள் போக்குவரத்துக் கட்டுப்பாடு
கள் மே மூன்றாம் திகதி நீக்கப்படும் என்
பதையும் இன்று பிரதமர் உறுதி செய்தார்
இரவு நேர ஊரடங்கு மே மூன்றாம் திகதி
க்குப் பின்னரும் மறு அறிவித்தல் வரை
தொடர்ந்து அமுலில் இருக்கும்.
உணவகங்களின் வெளி இருக்கைகள், மற்றும் அத்தியாவசியம் இல்லாத வர்த்
தக நிலையங்கள் என்பன சுகாதார
நிலைமையைப் பொறுத்து மே மாத நடுப்
பகுதியில் இருந்து “படிப்படியாக” “பிராந்
தியங்கள்” ரீதியாக திறக்கப்படும் என்று
மீண்டும் தெரிவித்த பிரதமர், அதற்கான
திகதி எதனையும் குறிப்பிடவில்லை.
பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென்னாபி
ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இரு
ந்துவரும் பயணிகள் மீதான கட்டுப்பாடு
கள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
குமாரதாஸன். பாரிஸ்.
22-04-2021