10 கி. மீற்றர் பயணக்கட்டுப்பாடு மே மூன்றாம் திகதி நீக்கப்படும்: பிரான்ஸ் அரச வட்டாரங்கள் தகவல்!

0
697

தற்சமயம் வதிவிடத்தில் இருந்து பத்துக் கிலோ மீற்றர்கள் என்று வரையறை செய்யப்பட்டிருக்கின்ற நடமாட்டக் கட்டுப் பாடுகள் அடுத்த மாதம் மூன்றாம் திகதி நீக்கப்படும்.

இன்று அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்
திற்குப் பின்னர் அரச வட்டாரங்கள் இத்
தகவலை வெளியிட்டன என்று ஊடகங்
கள் தெரிவித்துள்ளன.

அதிபர் மக்ரோன் கடைசியாக தொலைக்
காட்சி உரையில் தெரிவித்தபடி மே மாதம் 2ஆம் திகதிக்குப் பின்னர் நாடெங்கும் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக் காது என்று குறிப்பிடப்படுகிறது.எனி
னும் இரவு ஊரடங்கு குறித்து முடிவு
எதுவும் வெளியிடப் படவில்லை.

பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற திகதிக
ளிலும் மாற்றம் இல்லை. பாலர் மற்றும்
ஆரம்பப் பாடசாலைகள் அறிவிக்கப்பட்ட
வாறு ஏப்ரல் 26 ஆம் திகதியும், கல்லூரி
கள், உயர் கல்லூரிகள் அதனைத் தொடர் ந்து மே மூன்றாம் திகதியும் திறக்கப்படும்
என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.

பாடசாலைகளில் மேலும் பல சுகாதார விதி முறைகளைப் பின்பற்றவும் காற் றோட்ட வசதிகளை விரிவுபடுத்தவும்
முடிவுசெய்யப்பட்டுள்ளது.பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுகா
தார விதிகளைப் பிரதமர் நாளைய வியாழக்கிழமை மாலை செய்தியாளர்
மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

உணவகங்களின் வெளி இருக்கைக
ளைத் திறப்பது போன்ற ஏற்பாடுகளை
நாடளாவிய ரீதியில் அன்றி பிராந்தியங்
கள் வாரியாக (déconfinement “territorial”) முன்னெடுக்கின்ற யோசனையும் இன்
றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்
டவுள்ள சுகாதார விதிகளைப் பிரதமர் நாளைய வியாழக்கிழமை மாலை செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.
21-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here