வசந்தத்தில் வந்தது திடீர் குளிர்! வைன் தோட்டங்களில் அவலம்!!

0
306

விவசாயிகளது வாழ்வு எங்கேயும் எப்போதும் போராட்டம் தான். படத்தில் நீங்கள் காண்பது கார்த்திகைத் தீபமோ,
தீபங்களின் திருவிழாவோ அல்ல. வைன் தோட்டம் ஒன்றில் குருத்துவிடும் நிலை யில் உள்ள முந்திரிகைச் செடிகளைக் குளிரில் இருந்து வெப்பமூட்டிப் பாது காப்பதற்காக ஏற்றப்பட்டிக்கும் மெழுகு தீபங்களின் காட்சி.

ஐரோப்பா எங்கும் இதமான வசந்தகால ஏப்ரல் மாதத்தில் திடீரெனக் கடும் குளிர்க் காலநிலை தோன்றி உள்ளது. காலம் தவறிய மழை போன்று பருவம் தப்பிய பனி (Frost) பயிர்ச் செய்கையா ளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

பிரான்ஸில் வசந்த காலப் பகுதியில் துளிர்விடும் பழப் பயிர்களும் வைன்
செடிகளும் குளிரினால் முளை அழுகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சில நாட்க ளுக்கு முன்னர் இருபது பாகைகளுக்கு மேல் வெயிலுடன் இதமாக நிலவிய கால
நிலை பல பிராந்தியங்களில் திடீரென
மைனஸ் அளவில் குறைந்திருக்கிறது.
இதற்கு முன்னர் ஏப்ரல் மாதங்களில் என்
றுமே இல்லாத அளவாக மைனஸ் 4.9 டிகிறி (-4.9 degrees) வெப்பநிலை புதன்
கிழமை காலை பதிவாகி உள்ளது.

பிரான்ஸின் புகழ்பெற்ற வைன் தோட்டப் பிராந்தியங்களில் லேசாகப் பெய்து வரும் பனியில் இருந்து முந்திரிகைச் செடிகளின் முளைகளைப் பாதுகாக்கத் தோட்டக் காரர்கள் இரவுபகலாகப் போராடி வருகின்றனர். செடிகளுக்கு அருகே வரிசையில் மெழுகு திரிகளை ஏற்றுதல்,வெப்பமூட்டிகளை இயக்குதல், தொடர்ந்து தண்ணீர் தெளித்தல் என்று
பல வழிமுறைகளைப் பின்பற்றி பயிர் களைப் பாதுகாக்க முயன்று வருகின் றனர். இந்த வழிமுறைகள் முழுமையான பலனை அளிக்குமா என்பது தெரியாது.
எனினும் முயற்சி நடக்கிறது.

மொழுகு திரிகளும் தீச் சுவாலைகளும்
ஏற்றப்பட்டதால் இரவுகளில் தோட்டங்கள்
பிரகாசமாக ஒளிர்கின்றன.கண்கவரும் அந்தக் காட்சிகளின் பின்னால் தோட்டக் காரர்களின் நம்பிக்கைகளும் சேர்ந்தே எரிகின்றன.

எதனால் இந்த திடீர் குளிர் காலநிலை?

ஆர்ட்டிக் துருவப் பகுதியில் இருந்து நேரடியாக வருகின்ற அடர்ந்த குளிர் காற்றின் காரணமாகவே நாட்டின் வடக்கு, மத்தி மற்றும் கிழக்குப் பகுதிகளில்
வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது
என்று பிரான்ஸின் காலநிலை அவதான
நிலையம் தெரிவித்துள்ளது.இந்த வார இறுதி வரை குளிர் மற்றும் மழைக் கால நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு ள்ளது.

*படம் :Burgundy பிராந்தியத்தில் உள்ள Chablis வைன் தோட்டத்தில் (vineyard) தீச் சுவாலைகள் ஒளிரும் காட்சி.

குமாரதாஸன். பாரிஸ்.
08-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here