இன்று (30.3.2021) செவ்வாய்க்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் விண்ணுந்து நிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.யேர்மனியில் இருந்து அரசியற்தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்காக கைதுசெய்து சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதனை எதிர்த்து யேர்மனி ஈழத்தமிழர் மக்களவை, யேர்மனி இளையோர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பு ஆகியன யேர்மனிய மனிதநேய அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களை யேர்மனி முழுவதும் முன்னெடுத்து வந்தனர்.
இன்று (30.3.2021) செவ்வாய்க்கிழமை கைது செய்து வைக்கப்பட்டிருந்தவர்களை டுசில்டோர்ப் விண்ணுந்து நிலையத்திலிருந்து நாடுகடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது விண்ணுந்து நிலையத்தில் தமிழ்மக்களையும், யேர்மனி மனித உரிமை அமைப்புக்களையும், கட்சிகளையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோது நான்கு பேரை விடுதலை செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. இருந்தபோதும் 21.00 மணியளவில் 31 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.