சுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை!

0
652

நாட்டில் நடைமுறையில் உள்ள கொரோனா சுகாதார விதிகளை மீறி னாரா என்பது தொடர்பாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க்கிடம்( Erna Solberg) அந்நாட்டுப் பொலீஸார் விசா ரணை நடத்த உள்ளனர்.

தனது இல்லத்திலும் உணவகம் ஒன்றி லும் பத்துக்கு மேற்பட்டோரை ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பத்திரி கைகள் வெளியிட்டதை அடுத்தே அவரி டம் அது குறித்து விசாரணநடத்தப்படும் என்று பொலீஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில் பிரதமர் தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண் டாடினார். அச்சமயத்தில் ஒருமுறை வீட்டிலும், மற்றொரு தடவை உணவகத் திலுமாக தனது உறவினர்களோடு இரண்டு விருந்துகளை ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது.

உணவகத்தில் 13 பேர் பங்குபற்றிய விருந்தில் பிரதமர் கலந்துகொள்ள வில்லை. வாடகைக்கு அமர்த்தப்பட்ட
வீட்டில் ஜப்பானிய சுஷி(sushi) உணவு பரிமாறப்பட்ட மற்றைய இரவு விருந்து பசாரத்தில் அவரது உறவினர்கள் 14 பேர் உணவருந்தினர்.

நோர்வேயில் பொதுவாக பொது இடங்களிலும் வீடுகளிலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி உணவு அருந்துவது போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அத்தகைய சுகாதார விதிகளை நாட்டின் பிரதமர்
மீறி விட்டாரா என்பது தொடர்பாகவே
பொலீஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட் டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் தனது முகநூலில் மன்னிப்புக் கோரும்
பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

படம் :பிரதமர் எர்னா சொல்(Erna Solberg)

தகவல் :Aftenposten பத்திரிகை.

குமாரதாஸன். பாரிஸ்.
20-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here