அகதிகள் வரவேற்பு நிலையத்தின் பொறுப்பாளர் வெட்டிப் படுகொலை: சூடான் குடியேற்றவாசி கைவரிசை!

0
154

பிரான்ஸில் அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின் பொறுப்பாளர் வெளிநாட்டு அகதி ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். அகதிகள் தஞ்சம் மறுக்கப்பட்டவர் எனக் கூறப்படும் சூடானிய நாட்டைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியிருக் கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

நாட்டின் தெற்கே பிரணி அத்திலாந்திக் பிராந்தியத்தில் (Pyrenees-Atlantiques) போவ் (Pau)என்ற நகரில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அங்கு அமைந்துள்ள ‘கடா’ எனப்படும் அகதிகள் வரவேற்பு நிலையத்தின் (CADA-centre d’accueil pour demandeurs d’asile) பொறுப் பாளரான 46 வயதுடைய குடும்பஸ்தரே கொல்லப்பட்டார்.

பொறுப்பாளரின் கழுத்தில் மூன்று தடவைகள் வெட்டிக் காயப்படுத்தி அவரைக் கொன்றவர் கைது செய்யப் பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. கைதானவர் ஏற்கனவே குற்றச் செயல்களுக்காக அறியப்பட்டவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்தவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை வெளியிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் Gerald Darmanin சம்பவம் நடந்த போவ் நகருக்கு இன்று மாலை விஜயம் செய்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.
19-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here