தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை இராணுவம் சுருட்டிக்கொள்கிறது – யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

0
221

University-Leadershipதலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் கல்விக்கு ஒதுக் கப்படுகின்ற நிதியினை இராணுவம் தனக்கு சுருட்டிக் கொள்கின்றது என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் அரசியல் தலையீடு நிறுத்துதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற் றது.

இதில் உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அனைத்து பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனங்களின் முடி வின்படி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இதற்கான முக்கிய காரணங் களாக  கடந்த முறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அரசினை கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தையாவது ஒதுக்க வேண்டுமென்று.

ஆனால் அரசு செய்வதோஅதனைவிட குறைந்த தொகையினை ஒதுக்கிவிட்டு அதி லிருந்து தலைமைத்துவ பயிற்சியயன்று கூறி நிதியினை எடுத்து இராணுவத்திற்கு கொடுத்து வருகின்றது.

இன்று தலைமைத்துவ பயிற்சியால் பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

அடுத்ததாக பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டுமென்று கோரியி ருந்தோம்.

ஆனால் தொடர்ந்தும் அரசியல் தலையீடு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தினை பொறுத்த வரையில் அரசியல் தலையீடு உச்ச அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் நாம் தொடர்ந்து மெளனமாக இருப்பதனால் பல்கலைக்கழக உயர் கல்வி இலங்கையிலே நாசமாகிவிடும் என்றொரு காரணத்தினால் நாம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சம்பள உயர்வினை கோரியிருந்தோம். இங்கேயுள்ள புத்திஜீவிகள் வெளியேறிக் கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக இலங்கையினுடைய கல்வி தராதரம் வீழ்ச்சி யடைந்து வருகின்றது.

எனவே அவ்வெளியேற்றத்தினை தடுத்து அவர்களை தக்க வைப்பதற்காக அடிப்படை சம்பளத்தினை உயர்த்துமாறு கேட்டிருந்தோம்.

ஆனால் இன்றுவரை  அதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே நாங்கள் மீண்டுமொரு போராட்டத்தில் ஈடுபட்டுத்தான் இவ்வரசினை கல்வி மீது அக் கறை கொள்ள வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எமது சம்மேளனம் கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளது. எமது அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு பலன் கிடைக்காவிட்டால் தொழி ற்சங்க நடவடிக்கைக்கு தயாராவோம் என அவர் தெரிவித்தார்.

இதில் உரையாற்றிய விஞ்ஞான பீட ஆசிரிய சங்க தலைவர் ஜெயதேவன் தெரிவிக்கையில், இவ் ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கம் பல்கலைக்கழகங்கள் சுயா தீனமாக  இயங்க வேண்டுமென்பதே.

ஆனால் இப்போது குறிப்பாக எமது யாழ்.பல்கலையில் அரசியல் தலையீடு என்பது மிக மோசமாகவுள்ளது.

அரசியல் தலையீடு காரணமாக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாத நிலையிலுள்ளது.

பின் கதவால் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இவைக்கு எதிராகத்தான்  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளோம்.

றுகுணு பல்லைக்கழகத்தில் எவ்வித தகுதியுமில்லாத ஒரு சாதாரண மாணவியை பல்கலைக்கழகத்திற்குள் இணைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.

இவ்வாறு நாடெங்கும் கல்வி யில் சீர்கேடு தொடர்கிறது என்றார் விஞ்ஞானபீட ஆசிரி யர் சங்க தலைவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here