காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் பேரணி!

0
367

கிளிநொச்சியில் நீதிமன்றத் தடையையும் மீறி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பினால் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியானது ஏ9 வீதி வழியாக பழைய மாவட்ட செயலகம் வரை சென்றது.

இதன்போது இலங்கை அரசின் கடந்த கால செயற்பாடுகளை கண்டித்தும், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகள் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியில் இணைந்தவர்கள் வாயினையும் கறுப்பு துணிகளால் கட்டியிருந்தனர். குறித்த பேரணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்த்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு காவல்துறையினரால் பெறப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி குறிதத் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பேரணியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி, இன்றைய போராட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த மக்களை புதுக்குடியிருப்பில் காவல்துறையினர் தடுத்துவைத்தமைக்கு கண்டனம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here