தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ‘NIVAR’ சூறாவளி!

0
527


தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது இன்று (24ஆம் திகதி) காலை 08.30 மணிக்கு காங்கேசன்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.0E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here