கொரோனா கோரம்: பலி உலகளவில் 7 இலட்சத்தை எட்டுகிறது!

0
216

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஸ்பைன் மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (31) காலை 12 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 17,482,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 676,835 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10,942,542 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 5,863,225 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 66,334 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

அமெரிக்கா > 155,285பிரேஷில் > 91,377மெக்சிகோ > 46,000பிரித்தானியா > 45,999இந்தியா > 35,807இத்தாலி > 35,132பிரான்ஸ் > 30,254ஸ்பெயின் > 28,443பெரு > 19,021ஈரான் > 16,569ரஷ்யா > 13,802பெல்ஜியம் > 9,840

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here