மார்க்ஸ் (புள்ளி) எடுக்கும் நேரத்தில் மாஸ்க் (முகக் கவசம்) தைக்கும் யாழ்.மாணவன்!

0
548

உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா நோயில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாப்பதற்காக அனைவரும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்காக வீடுகளில் இருக்கும் போதே முகக்கவசம் (மாஸ்க்) அணிந்திருக்க முயற்சிக்கின்றனர்.

இதனால் தற்போது கடைகளில் முகக்கவசம் இல்லை. 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முகக்கவசம் தற்போது 150 ரூபாவுக்கு மேல் விற்கப்பட்ட போதிலும் கடைகளில் முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில், பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் வி.தனுஜன் என்ற மாணவன் தனது குடும்பத்திற்கு முகக் கவசம் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

(நன்றி:பிருந்தாபன் பொன்ராசா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here