
பிரான்சில் இந்தவார ஈழமுரசு 25 ஆவது ஆண்டு சிறப்பு மலராக வெளியாகவுள்ளது! பிரான்சில் ஈழமுரசு வார இதழ் 25 ஆவது ஆண்டினை நிறைவு செய்வதை முன்னிட்டு, சிறப்பிதழாக இந்தவாரம் வெளியாகவுள்ளது. அதனால் வழமைபோன்று இந்தவாரம் ஈழமுரசு நாளை செவ்வாய்க்கிழமை வெளிவரமாட்டாது எனவும் – எதிர்வரும் 10.01.2020 வெள்ளிக்கிழமை 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய சிறப்பு மலராக அதிக பக்கங்களுடன் வெளியாகவுள்ளது எனவும் – ஊடகமையம் தெரிவித்துள்ளது.