ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் நிகழ்ந்து 18 வருடங்கள் நிறைவு!

0
609

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அதிகாலை நடந்த சம்பவம் உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிய வைத்துள்ளது.

ஆம் ஆழிப்பேரையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 18 வருடங்கள் ஆகின்றன.

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளைத் தாக்கி அழிவை ஏற்படுத்தியது. இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் இலங்கையில் 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

சுனாமி அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் இன்று (26) திங்கட்கிழமை பல இடங்களில் ஆழிப் பேரலையால் பலியான உறவுகளுக்கான நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here