இறுதிப் போரின்போது தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம் என்கிறார் வடக்கிலிருந்து அமீர்!

0
542

இறுதிப் போரின்போது எதிரிகளின் சூழ்ச்சியினால்
தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோமென்றும் நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லையெனவும் திரைப்பட இயக்குநர் அமீர் தமிழர் தாயகத் தில் நின்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் இயக்குநர் பாரதிராஜாவும் சென்றிருந்தார்.

அமீீீீர் மேலும் தெரிவிக்கையில் –
2007ஆம் ஆண்டு இம்மண்ணிற்கு வருவதற்கு
நான் ஆயத்தமானேன்.
இலங்கைக்குச் சென்று போராட்டங்களைப் பார்க்க வேண்டுமெனக் கோரினேன். அந்த போராட்டங்களை உலக அரங்கிற்குப் பதிவு செய்ய வேண்டும் என
நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.
எனினும் அதுகைகூடவில்லை. எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம் என்றே நான் நினைக்கின்றேன்.
நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லை – என்றார்.

இவர்களின் பயணம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையிலேயே இந்தத் தகவலை அமீர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக திரையுலக பிரபலங்களான இயக்குனர் பாரதிராஜா  மற்றும் இயக்குனர் அமீர் ஸ்ரீலங்கா சென்று ஸ்ரீலங்கா அரசின் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்துள்ளனர்.

 வடமாகாண ஆளுநர் செயலகமும் சிங்கள அரசின் கீழ் இயங்கும் சிறிலங்கா அரச ஊடக குழுமம் நடத்தும் பாடல் போட்டியை தொடக்கி வைக்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் .

முதற்கட்டமாக வடமாகாண ஆளுனரை சந்தித்து கலந்துரையாடி பரிசு பொருட்களும், புத்தர் சிலைகளும் பெற்றுள்ளனர்.

நேரடியாக சிங்கள அரசின் கீழ் இயங்கும் ஒரு ஊடக வலையமைப்பு, 2009 இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராகவும் விடுதலைபுலிகளை அழிப்பதற்கும் சிங்கள மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 2009 முள்ளிவைக்கால் தமிழனப் படுகொலைக்கு பின், தமிழர்கள் மத்தியில் இனவுணர்வையும் , போராட்ட சிந்தனையையும் மழுங்கடிக்கும் வண்ணம் மஹிந்த ராஜபக்சவால் கொண்டு வரப்பட்ட வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஊடகமே குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசி வடக்கின் ஆளுநராக வலம்வரும் சுரேன் ராகவன் மூலம் சிங்களத்தின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஈழத்துக்கு வருகை தந்துள்ளனர் இந்த இயக்குனர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here