மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

0
164

சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  புதன்கிழமை அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையக ஊடக அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந் நினைவேந்தல் நிகழ்வில், மௌன வணக்கத்துடன், மலரஞ்சலி, என்பவற்றுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

´சிவராமுடனான நாட்கள்´ என்ற தலைப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜா,  ´இனிய நண்பன்´ என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளர் சமன் வகவாராட்சி, ஆகியோர் உரையாற்றினர்.

ஊடகவியலாளன் சகலமும் அறிந்தவன்-சிவராமினுடைய கனவாகும் என்ற வகையில், தமிழ்ச் சமூகத்தில் ஊடகக் கல்வி வாய்ப்புகளும் சவால்களும் தலைப்பில் நினைவுப் பேருரையினை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் மற்றும் வணிகக் கற்கைகள் பீடத்தின் மொழிகள் மற்றும் தொடர்பாடல் துறையின் தொடர்பாடல் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் நிகழ்த்தினார்.

 கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
sivaram memorial 0021sivaram memorial 0026 sivaram memorial 0022 sivaram memorial 0023 sivaram memorial 0024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here