மாலைத்தீவில் குடிநீர் இல்லை; அவசர நிலை பிரகடனம்!

0
202

maalai deevuஇந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன.

அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது.

இந்நிலையில் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அங்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

எனினும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் பிரத்யேகமாக கடல்நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்பட்டு வருவதால் அவர்கள் யாரும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படவில்லை.

தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாலேவில் உள்ள இலங்கை முஸ்லிம் ஏ எம் ஜதீர் வழங்கும் விவரங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here