ஆப்கானிஸ்தானில் 32 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

0
191

ஆப்கானிஸ்தான் நாட்டின் 3 மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 24 மணி நேரத்தில் 32 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மரூஃப் மற்றும் ஷோராபக் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஃபர்யாப் மாகாணத்தின் கைசர் மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  கிழக்கு கஸ்னி மற்றும் மேற்கு பட்கிஸ் மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களின் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here