திருகோணமலை தம்பலகாமம், பாரதிபுரப் படுகொலை 20ம் ஆண்டு நினைவுதினம்!

0
340

இன்று திருகோணமலை மாவட்டத்தில் தமிழரை அழித்து துரத்திய தம்பலகாமம், பாரதிபுரப் படுகொலை 20ம் ஆண்டு நினைவுதினம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரமடைந்த நாளில் இருந்து, தமிழ்மக்கள்எதிர்கொண்ட, அவர்களை உலுக்கியெடுத்தபடுகொலைகள் ஏராளம். அதிலும் கிழக்கு மாகாணம்படுகொலைகளின் களமாகவே இருந்தது. காரணம்சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டசிங்களக் குடியேற்றங்களும் அத்துமீறியகுடியேற்றங்களும் கிழக்கு மாகாணத்தை வசப்படுத்தமுற்பட்டமைதான். தமிழர் பிரதேசங்களில்படுகொலைகளை நிகழ்த்தி விரட்டியடிப்பதன் மூலம்சிங்களமயமாக்கலைச் செய்வதை உத்தியாகக்கொண்டிருந்தனர். நில அபகரிப்பிற்காக,கிராமப்படுகொலைகள் சத்தமின்றி நடந்தேறின. பாலம்போட்டாறு, ஜெயபுர ஆனதும்ம முதலிக்குளம் மொறவெவ ஆனதும் இப்படித்தான். இதன் தொடர்ச்சியாக, தம்பலகாமம் வடக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்தும் பொருட்டு தம்பலகாமத்தின் ஏனைய பகுதிகளை நோக்கித் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.அதில்தான், 01.02.1998 அன்று பாரதிபுரத்தில் நடந்தேறியது அந்தக் கோரச்சம்பவம்.

பொதுவாக, எல்லைக் கிராமங்களில் நடக்கும் படுகொலைகள், தாக்குதல்களைசிங்கள-தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் என வரையறைப்படுத்தி, சிறிலங்காஅரசு அதைக்கண்டு கொள்வதேயில்லை. இது சிங்களத் தாக்குதலாளிகளுக்கு வாய்ப்பாகஇருந்தது மட்டுமன்றி, அரசின் ஊக்குவிப்பாகக்கூட அமைந்தது. ஆனால் தம்பலகாமத்தில்நடந்த படுகொலையில் காடையர்களுடன் காவல்துறையும் சேர்ந்து கொண்டதுதான்மிகப்பெரிய அவலம்.

தம்பலகாமம், திருகோணமலைமாவட்டத்தில், விவசாயக் கிராமங்களைக் கொண்ட பிரதேசம். திருகோணமலை நகரத்திலிருந்து பன்னிரண்டுமைல் தொலைவில் அமைந்துள்ளது. சம்பந்தரால்பாடல்பெற்ற தலமான திருக்கோணேசரத்துடன்தொடர்புடைய ஆதிகோணேசுரர் ஆலயத்தைக்கொண்டமைந்த சிறப்புப் பெற்றது. பாரதிபுரம், தம்பலகாமத்தின் பசுமையான கிராமங்களில் ஒன்று. கந்தளாய்க்குளத்தின் நீரப்பாசனத்தால்விவசாயத்தில் தன்னிறைவைக் கொண்டிருந்த வளமான கிராமம். இதன் காரணமாகவேசிங்களவர்களின் இலக்காக மாறியது.

1990களின் பிற்பகுதியில் தம்பலகாம உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்த அத்தனைதமிழ்க்கிராமங்களும் இனத்தாக்குதலுக்கு உள்ளாகின. மனிதாபிமானமற்றதாக்குதல்களால் அப்பிரதேசம் ஒட்டுமொத்தமான, பாரிய இடப்பெயர்வைச் சந்தித்தது.பெருமளவு மக்கள் வடபுலம் நோக்கி ஓடிவந்தனர். எஞ்சியோர் அகதிமுகாம்களிலும்,உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர். கிராமத்து மண்ணையே தமதுசீவனோபாயத்திற்காக நம்பியிருந்த மக்களால் சிலகாலங்கள்கூட நீடிக்க முடியவில்லை.பசி, பஞ்சம், வறுமை வாட்டியெடுக்கத் தொடங்கியதால் உயிரைப் பணயம் வைத்து தமதுசொந்த இடங்களுக்குச் திரும்பவும் செல்லத் தொடங்கினர். இனவாத அட்டகாசங்கள்சற்றே தணிந்திருந்ததால், சிங்களவர்களால் பறிக்கப்பட்ட கிராமங்கள் போக, மீதிஇடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர்.

அவ்வாறு மீளக்குடியமர்ந்த கிராமங்களான புதுக்குடியிருப்பு, பொற்கேணி, பாரதிபுரம்போன்றவற்றை இலக்கு வைத்துப் பேரினவாதிகள் மீண்டும் தாக்கத்தொடங்கினர். அதன்உச்சக்கட்டமாக, தமிழர்களை அச்சமுறுத்தும் நோக்கில் ஒருகோரப்படுகொலையை பாரதிபுரத்தில் நிகழ்த்தி முடித்தது சிறிலங்கா காவல்துறை.

01-02-1998 அன்று காலை, மெதுவாக இருள் அகன்று கொண்டிருந்த வைகறைநேரத்தில் துயிலெழுந்த கிராமம் தனக்கான அன்றைய பணிகளுக்காக தயாராகிக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 5.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்ட அந்த விடியல்பொழுதில், காவல்துறை நிலையத்திலிருந்த காவல்துறையினரும் ஊர்காவல்படையினரும், அப்பகுதிகளில் வயல்வெளிக்கும், பணிக்கும் சென்றுகொண்டிருந்தவர்களை விசாரணை எனக்கூட்டிச் சென்று காவலரணனின் முன்னால்நிற்கவைத்தனர். காரணம் ஏதுமின்றி இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் நிதானிக்கும்முன்பு, சுற்றி நின்று சுட்டுத் தள்ளினர். மொத்தமாக எட்டு உடல்கள், சில கணங்களில்பிணமாகச் சரிந்தன. தொடர்ந்து நாலாபக்கமும் இலக்கின்றிச் சுட்டதில் பதினேழுபேர்படுகாயமடைந்தனர். உயிரிழந்த எட்டுப்பேரில், நான்குபேர் பள்ளிப்படிப்பை முடிக்காதமாணவர்கள். அவா்களில் இருவர் பதின்ம வயதில் இருந்த சகோதரர்கள்.

சுட்டுக்கொன்ற பின்னும் கொலைவெறி அடங்காத காவல்துறை, பிணங்களை உதைத்தும்குத்தியும் உருக்குலைத்தது. உயிரிழந்த ஒருவரின் ஆண் உறுப்பை வெட்டி அவரதுவாய்க்குள் திணித்துவிட்டுச் சென்றது. அதிகாலைவேளையில் நடந்த கோரக்கொலையால் தமபலகாமம் மீண்டும் ஒருமுறை கதிகலங்கியது. பிணமாகப்பிள்ளையைப் பார்த்த பெற்றோர், தந்தையைப் பார்த்த குழந்தைகளின் கதறல், அந்த வைகறைப் பொழுதை அதிரவைத்தது. அவர்களின் கண்ணீரில் அந்தக் கிராமமேநனைந்தது. அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற அச்சத்தில் பலர்உறைந்துபோயிருந்தனர். அன்று விழுந்த பேரிடியால், மீண்டும் தமது கிராமத்தை விட்டுஇடம்பெயரத்தொடங்கினார்கள்.

வழமையாக இத்தகைய தாக்குதல்களை இனவாதம் எனமுடிச்சிடும் சிறிலங்கா அரசு, இம்முறைகாவல்துறையின் அடாவடி நேரடியான சாட்சியங்கள்மூலம் நிரூபிக்கப்பட்டதால், கண்துடைப்பாக ஒருவிசாரணையை மேற்கொண்டது. விசாரணையில்பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும்ஊர்காவல்படையினரும் சம்பந்தப்பட்டிருப்பதாகநிறுவப்பட்டபோதும், இதுவரை அந்தக் குற்ற அறிக்கைநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை.

அன்றைய சம்பவத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகள் விபரம்

  1. அமிர்தலிங்கம் சுரேந்திரன் – 14
  2. அமிர்தலிங்கம் கஜேந்திரன்- 18
  3. முருகேசு ஜனகன் – 17
  4. நாதன் பவளநாதன் – 45
  5. சுப்பிரமணியம் திவாகரன்
  6. குணரத்தினம் சிவராஜன்
  7. ஆறுமுகம் சேகர்
  8. பொன்னம்பலம் கனகசபை

இன்று இவர்கள் நினைவாக
நினைவேந்தல் 01.02.2019

—–.

பொது மக்கள் மற்றும் த.தே.ம.முன்னணியின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் பிரகலாதனின் மேற்பார்வையிலும் மாவட்ட செயலாளர் குகனின் நெறிப்படுத்தலிலும் இவ் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இன்று 01/02/2019 மாலை 6 மணிக்கு இவ்விடத்தில் நினைவேந்தல் நடைபெறும் எனவும் அத் தருணத்தில் மக்களை நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறும் அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here