
சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதுடன்,பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்து வைத்திருந்துவிட்டு விடுவித்தனர் என்று உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது