
இன்று காலை பளைப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மீசாலையை சேர்ந்த சாரதி ஒருவர் பலியாகியுள்ளார் .
அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பளைப் பகுதியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ஹையேஸ் வாகனம் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்தவருக்கு அருகிலிருந்த மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து சாரதியான கந்தசாமி ரூபன் என்பவரே சம்பவ இடத்தில் பலியானார் என தெரியவருகின்றது. ஹையேசை செலுத்தி வந்தவரும் பிறிதொருவரும் காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை,
மேற்படி விபத்தில் சிக்குண்ட கொடிகாமம் K.P Travels உரிமையாளர் கந்தையா என்பவரும் ஆதபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரி யவருகின்றது.
படங்கள் மற்றும் தகவல்கள் – கயேன் கானு