ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

0
269

அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகள், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை நீக்குவதற்ககாக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும், உடனே பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தாமதிக்குமானால் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கின்ற நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், முதலீட்டாளர்கள் இலங்கையை நாடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here