பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன் – மைத்திரி; நான் பதவி விலகமாட்டேன்- ரணில்!

0
214

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தமக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளதாக  மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

நானே பிரதமர் -ரணில்

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் தாமே தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நான் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெறும் ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளதால் நானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜனநாயகத்திற்கு எதிரான சதி -அமைச்சர் மங்கள

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்குக்கும் சட்டத்திற்கும் முரணானது என்று ஊடகத்துறை மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான சதியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here