கென்யாவில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த பேருந்து; 55 பேர் பலி!

0
162

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் கென்யா நாட்டில் சாலைகள் மிகவும் மோசமானவை. இதனால் பொதுமக்கள் ஏராளமான விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் சாலைப் போக்குவரத்து மோசமாக இருக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் நைரோபியில் இருந்து கிஷ்மு நோக்கி பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி பேருந்து கவிழ்ந்தது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 55 பயணிகள் பலியானதாக கூறப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்தும்  லாரியும் மோதிக் கொண்டதில் 36 பேர் பலியாகினர். ஆண்டிற்கு சராசரியாக 3,000 பேர் கென்யாவில் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here