குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை!

0
528

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன்போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு  பொலிஸாரும் கொண்டு சென்றனர்.

இதற்கமைய இந்நிகழ்வை நிறுத்தி நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டதுடன் அடிக்கல் நாட்ட முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நீதிமன்றத்தின் உத்தரவை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரிடம் கொடுப்பதற்கு பொலிஸாரும் முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்கள் அதனைப் பெறவில்லை.

இதனையடுத்து நீதிமன்ற அறிவித்தலை பொலிஸார் வாசித்துக் காட்டியபோது, சிவாஜிலிங்கம் மற்றும் தவிசாளர் ஆகியோர் காதை மூடிக்கொண்டு நின்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here