பாலைவனமாக மட்டு. மக்கள் அனுமதிக்கக்கூடாது: கடையடைப்பு போராட்டத்திற்கு கோரிக்கை!

0
142

மட்டக்களப்பு பெரிய புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் விடயமானது ஒரு அரசியல் முகவரின் வியாபார சூதாட்டமென தமிழ் உணர்வாளர்களும் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் புல்லுமலையில் தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் நான்தான் அரசாங்கம் என்னை ஒன்றும் செய்ய முடியாது. முடிந்தால் நிறுத்திப் பாருங்கள் என்று சவால் விடும் தோரணையில் மக்களுக்கும் தனி ஒரு அரசியல்வாதிக்கும் இடையிலான போராட்டமாக இது மாறி வருவதனை அவதானிக்கலாம்.

தண்ணீர் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டமானது ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கோ எதிரானது கிடையாது. ஒரு பசுமையான கிராமம் பாலைவனமாக மாறும் திட்டத்திற்கு எதிரானதுதான் எமது போராட்டம்.

புல்லுமலையைச் சுற்றி தமிழர், முஸ்லிம், சிங்களவர் என மூவினத்தவருக்கும் விவசாயமும் கால்நடையும் கொண்ட வளமான பகுதிகள் உள்ளன. தண்ணீர் தொழிற்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுவது மூவின மக்களும்தான்.

விடுதலைப் போருக்கு பிற்பட்ட காலம் தொட்டு தமிழ் மக்கள் அமைதியான சமாதானமான சூழலையே விரும்புவதுடன் அதனையே எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் தமிழர் பகுதிக்குள் இவ்வாறு ஒரு தண்ணீர் தொழிற்சாலை அமைக்கப்படும் போது எந்தவித வன்முறையும் இன்றி ஜனநாயகமான சாத்வீக போராட்டத்தை தமிழ் உணர்வாளர்களும் சமூக அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நாட்டின் ஜனாதிபதியே சூழல் சுற்றாடல் அமைச்சுக்கு பொறுப்பாகவுள்ளார். அவரிடம் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் அவர் வாய்திறக்காமல் இருப்பது எல்லோருக்கும் வியப்பானது.

ஜனநாயக போராட்டத்தைக் கண்டு கொள்ளாத நிலையில் வன்முறையா? சமாதானமா? என தமிழ் இளைஞர் சமூகம் ஒரு புறம் குமுறிக் கொண்டிருக்கையில் இது விடயமாக இப் போராட்டத்தைக் கண்டு கொள்ளாமலும் நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது நல்ல எதிர்காலமாக அமையாது .

இதனால் எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வீட்டிற்குள் முடங்கி வீதிகளை வெறிச்சோட்டி ஹர்த்தால் கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here