கவுதமாலா எரிமலை சீற்றம் ; பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு!

0
322

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து எரிமலைக் குழம்புகளும் சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 99 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மீட்பு பணியின்போது மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் கவுதமலா எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here