கவுதமாலாவில் சீற்றத்துடன் எரிமலை வெடிப்பு: 62 பேர் பலி!

0
806

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62 ஆக உயா்ந்துள்ளது.

கவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.

இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகா் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் பலா் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனா்.

இந்த விபத்தில் சிக்கி உயிாிழந்தோா் எண்ணிக்கை 62 ஆக உயா்ந்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டின் தடயவியல் அறிவியல் அமைப்பின் தலைவா் பனுவேல் காா்சியா கூறும்பொழுதுஇ எரிமலையால் சேதமடைந்துள்ள கிராமங்களில் இருந்து மீட்பு பணியாளா்கள் அதிக உடல்களை மீட்டுள்ளனா்.

‘நெருப்பு எரிமலை’ என்ற அர்த்தம் கொண்ட பேகொ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 கிலோமீற்றருக்கு எரிமலை குழம்பை கக்கியதோடு வானத்தை நோக்கி கறும் புகையையும் சாம்பலையும் உமிழ்ந்தது. இந்த சாம்பல் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களிலும் பொழிந்துள்ளது.

குவாதமாலாவின் தலைநகரான குவாதமாலா சிட்டிக்கு தென் மேற்கு திசையில் 40 கிலோமீற்றர் தொலைவிலேயே இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கொன்ரெட் தெரிவித்துள்ளது.

எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாதமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்நாட்டு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“துரதிருஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்துவிட்டது. அதே வேளையில், லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே, அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் உள்ளுர் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் எரிமலைக் குழம்புக்கு மேலால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இப்பதோடு சம்பலால் மூடப்பட்ட மக்களை மீட்பாளர்கள் காப்பற்றி வருதை காட்டும் வீடியோ காட்சிகள் உள்ளுர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

சோளம் பயிர் நிலங்கள் ஊடாக எரிமலை குழம்பு ஓடியதாகவும் பலரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் தனது வீட்டை இழந்த பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “எனது வீடு தீப்பற்றிக் கொண்டது அனைவராலும் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். எங்களது சோள தோட்டம் முழுவதும் எரிந்துவிட்டது. நான் மலை பக்கமாக ஓடி தப்பித்தேன்” என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எரிமலை வெடிப்பால் மொத்தம் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மழையாக கொட்டும் சாம்பலில் இருந்து பாதுகாப்பு பெற முகமூடிகளை அணிந்து கொள்ளுமாறு நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் லாவாவின் வெப்பம் 700 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. எரிமலை சாம்பல் 15 கிலோமீற்றர் வரை பரவ கூடும். காற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகரின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக முகாம்கள் அமைப்பதற்கு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று குவாதமாலா சிட்டியின் லா அவுரோரா விமானநிலைய ஓடுபாதையை மூடியிருக்கும் சாம்பலை சுத்தம் செய்யவும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here