தியாகி பொன். சிவகுமாரன் 44ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

0
810

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்.

தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.

தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.

இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.

தியாகி பொன். சிவகுமாரன் மீளும் நினைவுகள் :

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்

தியாகி பொன் சிவகுமாரன்.!

சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்.!

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்.சிவகுமாரன்.

சிங்களஆதிக்ககனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்தவன் .!

தமிழீழ விடுதலைக்கு இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here