தமி­ழர்­கள் சுதந்­திர தினத்­தைக் கொண்­டாட முடி­யாது!

0
201

ஆங்­கி­லே­யர்­க­ளால் வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரம் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளால் பறிக்­கப்­பட்டு விட்­டது. தமி­ழர்­கள் சுதந்­திர தினத்­தைக் கொண்­டாட முடி­யாது. இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்துள்ளார்..
வடக்கு முத­ல­மைச்­ச­ரால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கேள்வி பதில் அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது-,
பெரும்­பான்­மை­யி­னர் என்ற விதத்­தில் சர்வ அரச அதி­கா­ரங்­க­ளை­யும் ஆங்­கி­லே­ய­ரி­டம் இருந்து பெற்­றி­ருந்­தார்­கள். அவற்றை வைத்­துக் கொண்டு ஆங்­கி­லே­யர் ஆண்ட காலத்­தில் சிங்­கள இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கப் பார­பட்­ச­மாக அவர்­கள் நடந்து கொண்­டார்­கள் என்ற பொய்­யான கார­ணத்­தைக் காட்டி சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­னார்­கள்.
இது உண்­மைக் கூற்­றல்ல. எப்­பொ­ழு­தும் தகை­மைக்கு முத­லி­டம் கொடுத்­த­வர்­கள் ஆங்­கி­லே­யர். அவர்­கள் காலத்­தில் திறந்த போட்­டிப் பரீட்­சை­க­ளில் முதன்­மை­யா­கத் தேறிய தமி­ழர்­கள் பல அரச வேலை­க­ளி­லும் மற்­றும் சேவை­க­ளி­லும் கட­மை­யாற்றி வந்­தார்­கள்.
தமிழ் மக்­களை எல்லா விதங்­க­ளி­லும் வலு­வி­ழக்­கச் செய்ய அவர்­க­ளுக்கு எதி­ரான சட்­டங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. ‘சிங்­க­ளம் மட்­டும்’ சட்­டம் இயற்­றப்­பட்ட போது தான் தமி­ழர்­கள் அள­வான சூடு கொண்ட வறு­வல் பாத்­தி­ரத்­தில் இருந்து அன­லெ­றி­யும் அடுப்­பில் விழுந்­துள்­ள­மையை உணர்ந்­தார்­கள்.
வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­க­ளில் தமி­ழர்­கள் வாழ்ந்து வந்த அவர்­க­ளின் வீடு­க­ளி­லி­ருந்து அடித்து விரட்ட கல­வ­ரங்­க­ளும் கல­கங்­க­ளும் அப்­போ­தைய அர­சு­க­ளா­லேயே முடுக்கி விடப்­பட்­டன. இவற்­றி­லி­ருந்து ஒரு உண்மை புலப்­பட்­டது. தமி­ழர்­கள் தமது சுதந்­தி­ரத்தை சிங்­கள மக்­க­ளி­டம் பறி­கொ­டுத்­தமை வெளிப்­பட்­டது. இன்­றும் நிலமை மாற­வில்லை.
வெள்­ளை­ய­ரி­டம் இருந்து நாம் பெற்ற சுதந்­தி­ரம் இன்று பொரு­ளற்­ற­தா­கப் போய்­விட்­டது. ஏனெ­னில் ஆங்­கி­லே­ய­ரின் ஆட்­சிக்­குட்­பட்­டி­ருந்த நாங்­கள் இன்று பெரும்­பான்மை இனத்­த­வ­ரின் ஆட்­சிக்­கும் அதி­கா­ரத்­திற்­கும் உட்­பட்­டு­விட்­டோம்.
ஒரு முறை­யான கூட்­டாட்சி அர­ச­மைப்­பின் கீழ் உண்­மை­யான அதி­காப் பகிர்வு பெற்­றா­லேயே அன்றி நாம் எமது பறி கொடுக்­கப்­பட்ட உரித்­துக்­களை மீண்­டும் பெற முடி­யாது – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here